நீலகிரி : குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டெருமை நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள டார்லிங்டன் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற அந்தோணியை காட்டெருமை எதிர்பாராத விதமாக கொம்பில் குத்தி வீசியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.