சாடிவயல் யானைகள் முகாமிற்கு சேரன், ஜானுக்கு பதிலாக புதிய கும்கிகள் வரவழைப்பு

கோவை : சாடிவயல் யானைகள் முகாமில் இருந்த சேரன், ஜானுக்கு பதிலாக புதிய கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.


கோவை : சாடிவயல் யானைகள் முகாமில் இருந்த சேரன், ஜானுக்கு பதிலாக புதிய கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் கிராமத்தில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு நீண்ட காலமாக சேரன், ஜான் ஆகிய கும்கி யானைகள் இருந்து வந்தன. இந்த நிலையில், சேரன் முதுமலை புலிகள் வனக்காப்பகத்திற்கும், சேரன் தெப்பக்காடு புலிகள் வனக் காப்பகத்திற்கும் நேற்று நள்ளிரவில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இரு யானைகளும் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி சுஜய், பாரி ஆகிய கும்கிகள் ஆனைமலை மற்றும் முதுமலை ஆகிய புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதால், கோவைக்கு அழைத்து வரப்பட்டது.



சேரன், ஜான் ஆகிய கும்கி யானைகள், சின்னத்தம்பி மற்றும் விநாயகன் காட்டு யானைகளை இடம் மாற்றும் செய்யும் முக்கிய ஆபரேசனில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மார்ச் மாதம் காட்டு யானை தாக்கியதில் ஏற்பட்ட காயம் மற்றும் கண்புரை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளை மேம்படுத்துவதற்காக 32 வயது சேரன் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



சேரன் மற்றும் ஜானுக்குப் பதிலாக சுயம்பு மற்றும் வெங்கடேஷ் ஆகிய கும்கிகள் கோழிக்கமுதி யானைகள் முகாமிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. கோவையில் மனித - விலங்குகள் மோதலை தடுப்பதற்காக சாடிவயல் பகுதியில் யானைகள் முகாம் கடந்த 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...