டெல்லி : ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறு, குறு தொழில்துறையினரின் ஜாப் ஆர்டருக்கு மத்திய அரசு விதித்துள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், எம்.பி.க்கள் பி.ஆர். நடராஜன் (கோவை), கே.சுப்பராயன் (திருப்பூர்), கணேஷமூர்த்தி (ஈரோடு), ஏ.கே.பி. சின்னராஜ் (நாமக்கல்), மாநிலங்களவை எம்.பி. டி. ராஜா மற்றும் கேரள மாநில எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக எம்.பி. நடராஜனை தொடர்பு கொண்டபோது அவர் பேசியதாவது :- ஜி.எஸ்.டி. வரியினால் ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இந்த விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்களை மட்டுமல்ல, நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தப்பட்டது.
2016-17-ம் ஆண்டு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2017-2018-ம் ஆண்டில் மட்டும் 50,000 சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. ஏனெனில், சிறு, குறு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிததை சமாளிக்க முடியாததே காரணமாகும், என்றார். மேலும், பொருளதார முன்னேற்றத்தில் ஜி.எஸ்.டி. முக்கிய பங்கு வகிப்பதாக பா.ஜ.க.அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், ஏன் மாதாந்தோறும் வரி விகிதம் மாறுபடுவதில்லை..? என அவர் கேள்வி எழுப்பினார்.