சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட தெற்கு தோட்டம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட தெற்கு தோட்டம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை எனக் கூறி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டு தெற்கு தோட்டம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பல இடங்களில் முறையாக தண்ணீர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், இதனைக் கண்டித்து குடிநீர் குழாய் அடைப்பினை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...