கோவை : டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் வண்ண சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் வண்ண சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சென்னை மண்டலத்தில் சிவப்பு நிற சட்டை அணிந்தும், சேலம் மண்டலத்தில் நீல நிற சட்டை, திருச்சியில் பச்சை நிற சட்டை, மதுரையில் மஞ்சள் நிறம் கோவையில் ரோஸ் நிற சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்ரமணியன் பேசியதாவது :- டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த மண்டல வாரியாக வண்ண சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பிட வேண்டும். சம பணிக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், ஊழியர்களின் பணி வயது வரம்பை 60 ஆக உயர்ந்திட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என கூறும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், தொடர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம், என தெரிவித்தனர்.