வரகலியாறு முகாமில் சின்னத்தம்பி மீண்டும் மரக்கூண்டில் அடைப்பு..?

கோவை : அண்மையில் கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை : அண்மையில் கூண்டில் இருந்து வெளியே விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வந்த சின்னத்தம்பி, கடந்த ஜனவரி 25-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வரகலியாறு வனப் பகுதியில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து இடம்பெயர்ந்த யானை மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையை பிடித்தனர். தொடர்ந்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்து பிப்ரவரி 16-ம் தேதி டாப்சிலிப் முகாமில் உள்ள மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து, 132 நாட்கள் பயிற்சி முடிந்த நிலையில், முகாம் யானைகளுடன் சேர்ப்பதற்காக மரக் கூண்டிலிருந்து சின்னத்தம்பி வெளியேற்றப்பட்டான். இருப்பினும், அவனது கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு இருந்தது.

பயிற்சி முடிவடைந்து சின்னத்தம்பி இனி கும்கி யானைகளுடன் பழக விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சின்னத்தம்பி யானை மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது. இதனிடையே, சின்னத்தம்பி யானைக்கு இன்னும் பயிற்சி முடியவில்லை என்றும், நீண்ட நாட்கள் பயிற்சி அளிக்கப்பட வேண்டி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...