திருப்பூரில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சி.பி.ஐ. கட்சியினர் கொசுவலை போர்த்தி நூதன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : சாலை மற்றும் சாக்கடை வசதிகளை நிறைவேற்றித் தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலை போர்த்தியும், தலையில் கட்டு போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : சாலை மற்றும் சாக்கடை வசதிகளை நிறைவேற்றித் தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசு வலை போர்த்தியும், தலையில் கட்டு போட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி ஜே.ஜே. நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் தார் சாலைகள் மோசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி அவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும், அதேபோல் சாக்கடை பல மாதங்களாக தூர்வாராததால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கொசுவலைகளை தங்கள் மீது போர்த்தியும், தலை மற்றும் கைகளில் காயம் பட்டது போல் கட்டு கட்டிக் கொண்டும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...