கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவியிலியரை தாக்கிய சம்பவத்தில் தங்கராஜ் என்பவரை போலீசார் கைது செய்ததையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியைச் சேர்ந்த ருக்மணி மற்றும் அவரது கணவர் ராஜன் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த போது, லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த ருக்மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த நிலையில், ருக்மணி உயிரிழப்புக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் எனக் கூறி மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவரை அவரது உறவினர்கள் தாக்கினர். மேலும், மருத்துவமனையை சூறையாடினர். இது தொடர்பான சி.சி.டிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அவரசர சிகிச்சை பிரிவில் உள்ள கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்த காட்சியில், ஒருவர் ஆக்ரோசமாக தாக்குவது பதிவாகியுள்ளது.
இதையடுத்து, செவிலியர்களையும், மருத்துவர்களையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 60 செவிலியர்கள் இன்று காலை முதல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், தாக்குதல் நடத்திய தேக்கம்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கையால் காலை முதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடத்தி வந்த பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.