தமிழகம் முழுவதும் 13-ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடப்பதாக அறிவிப்பு

கோவை : தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி தமிழகத்தில் வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதி மன்றம் நடத்தப்படவுள்ளது.

கோவை : தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி தமிழகத்தில் வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதி மன்றம் நடத்தப்படவுள்ளது.

​தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி, தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் மாவட்டங்களில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகின்ற 13 -ம் தேதி (சனிக்கிழமை) மக்கள் நீதிமன்றம் நீதி நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும். இந்த மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்துகளில் இழப்பீடு சம்மந்தப்பட்ட நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டுவரி ஃ தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்மந்தமான ரிட் மனுக்கள், செக்மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன் ஃ இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்குபெற்று வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள மக்கள் நீதிமன்றம் வாய்ப்பளிக்கிறது.

​மேலும், மக்கள் நீதிமன்றங்கள், இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற பிரச்சனைகளில் இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்க வழிவகை செய்கின்றது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சம்மந்தமாக வழக்காடுபவர்களோ அவர்களின் சார்பில் வழக்கறிஞர்களோ, வரும் 08-தேதிக்குள் செயலாளர், உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் குழு, மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடம், முதல் மாடி, வடக்கு கோட்டை சாலை, உயர்நீதிமன்ற கட்டிட வளாகம், சென்னை - 600 104 என்ற முகவரியிலோ, 044 - 2534 2834 என்ற தொலை பேசியிலோ அல்லது 1800 4252 441 என்ற இலவச அழைப்பு எண்ணிலோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்கலாம். மேலும், மாவட்டங்களில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலமும் தங்களது விருப்பத்தினை தெரிவித்து, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் தங்கள் வழக்குகளை விரைந்து தீர்வு காணலாம் என சென்னை உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...