விவசாயிகளின் அனுமதி இன்றி விளைநிலத்தில் நுழைய கூடாது : உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் திருப்பூர் விவசாயிகள் தீர்மானம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயிகளின் அனுமதி இன்றி விளைநிலத்தில் நுழைய கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் திருப்பூர் விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயிகளின் அனுமதி இன்றி விளைநிலத்தில் நுழைய கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் திருப்பூர் விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

காங்கேயம் அருகே பொன்னாளி பாளையத்தில் நேற்று பவர் கிரிட் நிறுவனத்தினர் உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்ய வந்துள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அளவீடு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. அளவீடு செய்ய வந்த அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, இன்று அப்பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்திக்க தி.மு.க. துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் சென்றனர். தாராபுதம் முதல் சத்தீஷ்கர் மாநிலம் ராய்கர் வரை அமைக்கப்படும் 800 கிலோ வோல்ட் மின்சார டவர் லைன் அமைக்க அளவீடு செய்யப்பட்டுள்ள இடங்களையும் பாதிக்கப்படும் விவசாயிகளையும் சந்தித்து பேசினர்.



அதன்பின், அப்பகுதி விவசாயிகளுடம் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டவர் லைன் அமைத்து விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் புதைவட கேபிள் வழியாக மின்சாரத்தை சாலைகளின் ஓரத்தில் கொண்டு செல்ல வேண்டும், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் ஏதும் நடத்தாமல் இப்படி அத்துமீறி விவசாயிகளின் அனுமதி இன்றி அளவீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகையில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் டவர் லைன் அமைப்பதை கைவிட வலியுறுத்தி ,விரைவில் மின்பாதை செல்லும் மாவட்டங்களில் உள்ள மக்களை ஒன்று திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். வரும் 8 ஆம் தேதி உயர்மின்கோபுர விவசாயிகள், பெட்ரோல் பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்றிணைந்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவு தர வேண்டுகோள் விடுக்க உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...