திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித கழிவு மற்றும் சாய ஆலை கழிவுகள் கலப்பதாக எழுந்த புகாரின் பேரில், 5 செப்டிக் டேங்க் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் துவங்கி கரூர் வரை செல்லக்கூடிய நொய்யலாற்றில் சாயக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை இரவு நேரங்களில் முறைகேடாக கலப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து, நூல் கரையோரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி நிர்வாகம், ஆற்றங்கரையோரம் மனிதக்கழிவுகளை கலக்க கிளம்புவதாக சுமார் 5 செப்டிக் டேங்க் லாரிகளை பறிமுதல் செய்த நடவடிக்கை எடுத்தனர்.

நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், முறைகேடாக செயல்படும் இதுபோன்ற தனியார் செப்டிக் டேங்க் நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.