கோவை : மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- வருகின்ற 6-ம் தேதி முதல் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை துவங்குகிறது. நேரடியாகவும், மிஸ்ட் கால் மூலமாகவும் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். 8980808080 என்ற எண்ணை அழைத்து பா.ஜ.க.வில் இணையலாம். தமிழ்நாட்டில் கடந்த முறை நடந்த உறுப்பினர் சேர்க்கையில் 40 இலட்சம் பேர் மிஸ்ட்கால் மூலம் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த முறை அதைவிட அதிகம் பேர் இணைவார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது. மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது. மக்களை ஏமாற்றுவதற்காகவே காலி குடங்களை வைத்து கொண்டு ஸ்டாலின் தண்ணீர் பிரச்சனை குறித்து போராட்டம் நடத்துகிறார். எத்தனை நீர்நிலைகள் தி.மு.க. ஆட்சியில் தூர்வாரப்பட்டன என்பதை ஸ்டாலின் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்யாமல், ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய வேண்டும். மற்ற பிரச்சணைகளை போலவே நீர் பிரச்சனையிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. ஊடக விவாதங்களில் பா.ஜ.க.வினர் கலந்து கொள்வதில்லை என்பது கட்சி எடுத்த தற்காலிக முடிவு. காங்கிரஸ் கட்சி தேசிய கட்சியல்ல. ஒரு குடும்பக் கட்சி. பா.ஜ.க. குடும்ப கட்சியல்ல, என தெரிவித்தார்.