கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணிக்க வார்டு வாரியாக 3 பேர் கொண்ட் குழு நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை கண்காணிக்க வார்டு வாரியாக 3 பேர் கொண்ட் குழு நியமிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட மாநகராட்சி ஆணையர் பேசியதாவது :- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் நிர்வாகம் தீவிரமாக உள்ளது. 3 பேர் கொண்ட குழுவினர் அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதா எனக் கண்காணிக்கும். அவ்வாறு கட்டமைக்காத குடியிருப்புகளுக்கு வரும் ஆக்ஸ்ட் 15-ம் தேதி வரை மாநகராட்சி நிர்வாகம் அவகாசம் அளிக்கும். அந்த அவகாசத்திற்குள்ளும் கட்டமைக்கவில்லையெனில், சம்பந்தப்பட்ட குடியிருப்பின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தொடர்ந்து, சூயஸ் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “சூயஸ் நிறுவனத்தின் குடிநீர் திட்டப்பணிகள் ஆர்.எஸ். புரம் பகுதியில் முழுவீச்சில் நடந்து வருகிறது. மக்கள்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், பல்வேறு சிக்கல்களுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் முன்பு செலுத்தியிருந்த தொகையே கட்டணமாகும். இதனை கோவை மாநகராட்சி வசூலிக்கும்,” என்றார்.
இதனிடையே, கோவை மாநகராட்சியில் நடந்த இன்றைய மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 61 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.