கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் சார்பில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது :- மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. எங்களால் முடிந்தவரை மக்களின் பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுப்போம். ஆனால், எதிர்மறையான பதில்களை அளிக்க மாட்டோம். பெறப்படும் புகார்களின் மீது அன்றைய தினமே நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் கோவை மாநகராட்சி ஆணையர் பேசுகையில், “உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு புதன்கிழமைகளின் காலையிலும் மக்கள் எங்களை தொடர்பு கொண்டு மனு அளிக்கலாம்.

மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான பிரச்சனைகளை மக்கள்தான் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே, பொதுமக்கள் இந்த குறை தீர்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.