குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்ட கரடி கூட்டம் : தீப்பந்தங்களினால் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள கரோலினா பெரியார் நகர் பகுதியில் நாவல் பழம் சாப்பிடுவதற்காக கூட்டமாக வந்த கரடிகளை வனத்துறையினர் தீப்பாந்தம் மூட்டி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

நீலகிரி : குன்னூர் அருகே உள்ள கரோலினா பெரியார் நகர் பகுதியில் நாவல் பழம் சாப்பிடுவதற்காக கூட்டமாக வந்த கரடிகளை வனத்துறையினர் தீப்பாந்தம் மூட்டி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கரோலினா எஸ்டேட். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தோட்டத்தில் நாவல் பழங்களை சாப்பிட மாலை நேரத்தில் வந்த கரடி கூட்டம், தொடர்ந்து இரவு வரை இப்பகுதியில் உள்ள பாலடைந்த வீட்டினுள் பதுங்கிக் கொண்டன. இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னூர் வனத்துறையினர், இரவில் தீப்பந்தங்களுடன் சென்று கரடி கூட்டத்தை 6 மணிநேரத்திற்குப் பின் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர். இதன் காரணமாக, தோட்ட தொழிலாளர்கள் ஊர்மக்கள் நிம்மதி அடைந்தனர். 



இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் இந்த கரடி கூட்டத்தை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் துரத்த வேண்டுமென்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...