கோவையில் வரும் அக்.,7-ம் தேதி கோவை மராத்தான் போட்டி : ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

கோவை : கோவை கேன்சர் பவுண்டேஷன் மற்றும் வோடோபோன் நிறுவனம் இணைந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி மாரத்தான் போட்டியை நடத்துகிறது.

கோவை : கோவை கேன்சர் பவுண்டேஷன் மற்றும் வோடோபோன் நிறுவனம் இணைந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி மாரத்தான் போட்டியை நடத்துகிறது.

வரும் அக்டோபர் 7-ம் தேதி கோவையில் நடக்கும் இந்த 7-வது பதிப்பு போட்டியில், மிக பிரமாண்டமான அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக புற்றுநோய்க்கு எதிரான போராட்ட விழிப்புணர்வாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், திரட்டப்படும் நிதி கேன்சர் பவுண்டேஷனுக்கு வழங்கப்பட்டு, நூற்றுக்கணக்கான குடும்பத்தினருக்கு சிகிச்சைக்காக உதவப்பட்டு வருகிறது. கோவைகேன்சர் பவுண்டேஷன், இந்த உதவியை கோவை ரன்னர்ஸ் உடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நடத்தப்படும் போட்டியானது, 21.1 கி.மீ., தூரம் கொண்ட பாதி மாரத்தான் மற்றும் 10 கி.மீ., ஓட்டம், 5 கி.மீ.,ஓட்டம்/ நடத்தல் போன்றவை இடம் பெறுகின்றன. பதிவு கட்டணம் பாதி மாரத்தான் போட்டிக்கு ரூ.1,000, 10 கி.மீ., ஓட்டத்துக்கு ரூ. 900 மற்றும் 5 கி.மீ., மராத்தான்/ நடைக்கு ரூ. 600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 2.70 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். ஆண், பெண் அனைத்து பிரிவு மாரத்தான் 21.1 கி.மீ,, தூரத்தில் முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000. 10 கி.மீ., பந்தயத்தில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகள் முறைப்படி, ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000-ம் ஆகும். 45 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் மூன்று இடம் பிடிப்போருக்கு ரூ.15,000, ரூ.10,000, மற்றும் ரூ.5,000 பரிசாக வழங்கப்படும். இவை, பாதி மாரத்தான், 10 கி.மீ.,பிரிவில் வெற்றியாளர் பரிசாக பெறுவர். 

கோவையின் ஆரோக்கியத்துக்காக நடத்தப்படும் இப்போட்டியில் 16,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. பங்கேற்க விரும்புவோர் www.coimbatoremarathon.com. என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு வோடோபோன் ஐடியா லிமிடெட் வணிக பிரிவு தலைவர் எஸ். முரளி கூறுகையில், “மதிப்புமிக்க வோடோ போன் ஐடியா நிறுவனம், சமுதாயத்தில் மாறுபட்ட இயங்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டது. புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கோவை கேன்சர் பவுண்டேஷனுடன் இணைந்து போட்டியை நடத்துவதில் பெருமையடைகிறது. புற்றுநோயுடன் வாழும் ஒவ்வொருவரும், வாழ்க்கையில் உள்ள சவால்களை சந்திக்க உத்வேகமூட்டும் உண்மையான கதாநாயகர்கள். கடந்த 2013ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இப்போட்டி, வோடோபோன் வாடிக்கையாளர்களிடையே உறவை வலுப்படுத்தியுள்ளதோடு, நம்பிக்கையையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் போட்டியில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இது மாபெரும் வெற்றியை பெற்றுத் தரும்,”என்றார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...