திருப்பூர் : திருப்பூர் அருகே இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ஆர். தினேஷ் குமார். தந்தையை இழந்த இவர், தனது தாயாருடன் வசித்து வந்தார். இருவரும் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்றைய தினம் வேலைக்கு சென்ற தாயார் வந்து பார்த்த போது, காயங்களுடன் தினேஷ்குமார் படுத்து கிடந்தார். அவரது வாயில் சாணிப்பவுடர் குடித்த அடையாளங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட தினேஷ்குமார் நள்ளிரவு சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

இந்த நிலையில், தினேஷ் சாணிப்பவுடர் குடித்து உயிரிழக்கவில்லை எனவும், தினேஷ் அதே பகுதியை சேர்ந்த வேறு சமுதாய பெண்ணை காதலித்ததாகவும், நேற்றையதினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தினேஷ் குமார் வீட்டில் தங்கியிருந்தபோது, பெண் வீட்டார் 10-க்கும் மேற்பட்டோர் தினேசை தாக்கியதாலே அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்ய வேண்டும் எனவும், தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனக்கூறி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர்.