கோவை : மதுக்கரை அருகே கல்குழியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஏ.சி.சி. சிமெண்ட் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏ.சி.சி. சிமெண்ட் கம்பெனிக்கு சொந்தமான கல்குழியில் 4-ம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களும், 5-ம் வகுப்பு படிக்கின்ற ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறை துறையினரின் உதவியால் இரவு முழுவதும் போராடி 3 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பார்வையிட்டார்.
இதனிடையே, மிகவும் ஆபத்தான மற்றும் ஆழமான கல்குழிக்கு எவ்வித பாதுகாப்புமின்றியும், தகுந்த எச்சரிக்கை பலகை வைக்காமல் அலட்சியமாக இருந்த ஏ.சி.சி. சிமெண்ட் நிர்வாகத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், மதுக்கரை உதவி ஆய்வாளர் முத்துகுமார், 304(ii) IPC படி, ஏ.சி.சி. நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, பேரூர் உட்கோட்ட காவல் துணை காவல்கண்காணிப்பாளர் பாலமுருகன் புலன் விசாரணை செய்து வருகிறார்.