தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக் கடைகளை அமைப்பதற்கான உரிமம் பெற ஜுலை 3-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கோவை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை அமைப்பதற்கான உரிமம் பெற ஜுலை 3-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை அமைப்பதற்கான உரிமம் பெற ஜுலை 3-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27-ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர காவல்நிலையங்களின்‌ எல்லைகளுக்கு உட்பட்ட ((பி1 முதல்‌ பி4, சி1 முதல்‌ சி4, இ1 முதல்‌ இ3 மற்றும்‌ டி1 முதல்‌ டி4 (பி1 முதல்‌ பி15) வரையிலான காவல்‌ நிலைய எல்லைகள்‌)) பகுதிகளில்‌ தற்காலிக பட்டாசு உரிமம்‌ பெற விண்ணப்பிப்பவர்கள்‌ வரும் 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை காலை 10 மணி முதல்‌ மாலை 05 மணிக்குள்‌ கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ அலுவலகத்திற்குக் கீழ்க்கண்ட ஆவணங்களுடன்‌ தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும்‌.

1) விண்ணப்பப்படிவம்‌ 4-ல்‌ ரூ.2/- மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்‌.

2) உரிமக்கட்டணம்‌ ரூ.500/- கருவூலத்தில்‌ வங்கியில்‌ செலுத்தியதற்குரிய சலான்‌. இதற்கான சலான்‌ இவ்வலுவலகத்தில்‌ வழங்கப்படும்‌. (காலை 10 மணி முதல்‌ மதியம்‌ 2 மணி வரை)

3) பட்டாசு இருப்பு வைத்து விற்கப்படவுள்ள இடத்தின்‌ வரைபடம்‌ 6 நகல்கள்‌. வரைபடத்தில்‌ சம்பந்தப்பட்ட இடத்தின்‌ முகவரி

முழுமையாகக் குறிப்பிடப்பட வேண்டும்‌. மேலும்‌, மனுதாரர்‌ தனது கையொப்பம்‌ இட்டிருக்க வேண்டும்‌.

4) அவ்விடம்‌ சொந்தக்‌ கட்டிடமாக இருப்பின்‌ 2019-2020-ம்‌ ஆண்டுக்‌குரிய முதலாம்‌ அரை ஆண்டு வரை அதாவது, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது.

5) வாடகைக்‌ கட்டிடமாக இருப்பின்‌ 2019-2020-ம்‌ ஆண்டுக்குரிய முதலாம்‌ அரை ஆண்டு வரை அதாவது, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை செலுத்தப்பட்ட சொத்துவரி ரசீது. சொத்துவரி ரசீதுடன்‌ கட்டிட உரிமையாளரின் சம்மதக்‌ கடிதம்‌ ரூ. 20/- மதிப்புள்ள முத்திரைத்தாளில்‌ 2 சாட்சிக்‌ கையொப்பத்துடன்‌ (சாட்சிகளின்‌ முழு விலாசத்துடன்‌ தேவை.)

6) மாநகராட்சி/ பொதுப்பணித்துறை/ மற்ற துறை கட்டிடமாக இருப்பின்‌ அத்துறை சார்ந்த அலுவலரின்‌ மறுப்பின்மை கடிதம்‌.

7) மாநகராட்சி/பஞ்சாயத்திற்கு உரிமக்‌ கட்டணம்‌ செலுத்திய ரசீது.

மேற்கண்ட ஆவணங்களுடன்‌ அறிவிக்கப்பட்ட தினத்திற்குள் பெறப்படும்‌ முழுமையான விண்ணப்பங்கள்‌ மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களைப்‌ பார்வையிட்டு, விசாரணைக்குப் பின் காவல்துறை கண்ணோக்கில்‌ திருப்தியடையும்‌ பட்சத்தில்‌ மட்டுமே உரிமம்‌ வழங்கப்படும்‌. வெடிபொருட்கள்‌ கட்டுப்பாட்டுத்துறை அறிவுரைப்படி, சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம்‌ வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட தேதிக்கு மேல்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்கக் காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள்‌ முழுமையாகப்‌ பெறப்படாத விண்ணப்பங்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும்‌.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...