பொள்ளாச்சியில் குடிமராமத்துப் பணிகள் குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவை : பொள்ளாச்சி பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆலோசனை மேற்கொண்டார்.

கோவை : பொள்ளாச்சி பகுதிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆலோசனை மேற்கொண்டார்.

பொள்ளாச்சி கே.கே.ஜி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் இரா. ரவிக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ஆனந்தன் (ஆழியார் கோட்டம்), முத்துசாமி (பொள்ளாச்சி கோட்டம்), வட்டாட்சியர் தணிகைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- தமிழகத்தில் நீர்ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-20 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1.829 பணிகள் ரூ. 499.68 கோடி மதிப்பீட்டில் குடிமரமாத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 45 பணிகள் ரூ. 7.43 கோடியில் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் (அல்லது) நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் (அல்லது) பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி, கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள், முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டிடங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளைப் பலப்படுத்துதல், குளங்களின் கரைகளைப் பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ‘பங்கேற்பு பாசன மேலாண்மையில்” விவசாயிகள் தங்களை செவ்வனே ஈடுபடுத்தி, பங்களிப்பாக மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ வழங்கிடவும், 90 சதவீதம் அரசின் நிதியாகவும் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 23 பணிகள் ரூ. 392 லட்சங்களிலும், பரம்பிக்குளம் வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 21 பணிகள் ரூ.341 லட்சங்களிலும், பவானி சாகர் அணைக்கோட்டம் வாயிலாக ஒரு பணிக்கு ரூ.10 லட்சத்திலும் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்காணும் குடிமராமத்து பணிகள் மூலம் கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துகடவு மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் 50,775 ஹெக்டர் பாசன நிலங்கள் பயன்பெறும். வேளாண் பெருமக்கள் இத்திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திப் பயன்பெறலாம்.

அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள இத்திட்டமானது அந்தந்த பகுதி விவசாயிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. அலுவலர்கள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதுடன் வாய்க்கால்களில் நீர் செல்வதற்கான வழிகளை கண்காணித்திட வேண்டும். வாய்க்கால்களில் நீர் செல்லும்போது வேறு எங்கும் அதிகளவில் நீர் விரையம் ஆகாமல் சரிசெய்யவேண்டும். நீர் செல்லும் வாய்க்கால்களில் உள்ள ஷட்டர்களை சீர் செய்வதுடன் மிகவும் பழுதடைந்து உள்ள ஷட்டர்களை மாற்ற வேண்டும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில், மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலம் பருவ மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்க இயலும், எனக் கூறினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...