கோவை : கோவை மாநகராட்சியில் 90 மற்றும் 91 ஆகிய வார்டுகளில் ரூ. 94 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 91-வது வார்டு சுகுணாபுரம் மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 40.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை, கழிப்பறை, மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், 90-வது வார்டு கோவைப்புதூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக்கடை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
இதேபோல, 90-வது வார்டு கோவைப்புதூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவுக் கூடத்தையும், 91-வது வார்டு குளத்துப்பாளையம் அம்மாசை கவுண்டர் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 36 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் ஆக மொத்தம் ரூ. 94 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொதுமக்களின்; பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் டி.ஆர். ரவி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.