கோவையில் தேசிய அளவிலான குத்துச்சண்டை வீராங்கனை விஷம் அருந்தி தற்கொலை

கோவை : கோவையைச் சேர்ந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை வீராங்கனை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையைச் சேர்ந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை வீராங்கனை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பூசாரிபாளையத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). இவர், கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சிறு வயதிலிருந்தே குத்துச்சண்டை போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டு வந்தார். மேலும், இவர் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 



இதையடுத்து, பெற்றோர்கள் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், யுரேகா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த கல்லூரி மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், யுரேகா தான் படிக்கும் மெக்கானிக்கல் வகுப்பில் ஒரே பெண் எனவும், ஆதலால் கல்லூரியை மாற்றித் தர வேண்டும் எனவும் பெற்றோரிடம் வலியுறுத்தியதாக தெரிய வந்துள்ளது. ஆனால், பெற்றோர் கல்லூரியைத் தொடர வற்புறுத்தியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், யுரேகாவின் தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது, "யுரேகா தேசிய அளவிலான பாக்சிங் விளையாட்டுப் போட்டியில் நன்கு பயிற்சி பெற்றவர். உலக அளவில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததும் தெரியவந்தது. ஆனால், அவர் படித்த கல்லூரி நிர்வாகம் யுரேகாவின் குத்துச்சண்டை ஆர்வத்திற்கு தடை விதிக்கும் வகையில் நடந்து கொண்டது. குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்காக விடுப்பு கேட்டால் கூட வழங்கவில்லை," என குற்றம் சாட்டுகின்றனர்.



இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் நாம் கேட்ட போது, "மாணவி இறந்ததற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. கல்லூரியில் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம். அதேபோல, கட்டணங்கள் கூட இல்லாமல் படிக்க உதவி செய்துள்ளோம். மற்றபடி பரப்பப்படும் தகவல்கள் தவறானவை," என தெரிவித்தனர். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...