கோவை வனக்கோட்டத்தில் யானைகள் ஊடுருவலைத் தடுக்க ரூ. 7.24 கோடியில் முன்னெச்சரிக்கை அமைப்பு

கோவை : பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுவதைத் தடுக்கும் விதமாக, கோவை வனக்கோட்டத்தில் ரூ. 7.24 கோடி செலவில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவித்தார்.

கோவை : பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுவதைத் தடுக்கும் விதமாக, கோவை வனக்கோட்டத்தில் ரூ. 7.24 கோடி செலவில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அறிவித்தார்.

வனத்துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் விவாதம் நேற்று நடைபெற்றது. அதற்கு பதிலளித்து பேசிய போது அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் அறிவித்ததாவது :-மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தமிழகக் கிராமங்களில் மனித-யானை மோதல்களால், கடந்த இரண்டு வருடங்களில் 20 மனித உயிர் இழப்புகள், 17 மனித காயங்கள், மனித உடைமைகளுக்கும், பயிர்களுக்கும் அதிக அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியிலிருந்து மனித வாழ்விடங்களுக்குள் யானைகள் புகுவதை கண்காணிப்பதற்காக, தொலைதூரக் கட்டுப்பாட்டு தெர்மல் கேமரா, கண்காணிப்பு படப்பிடிப்பு கருவி, கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு முதலமைச்சர் ஆணையின்படி, கோவை வனக்கோட்டத்தில் 2019-20-ம் ஆண்டு 7.24 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் விதமாக, புதிதாக 15 அறைகள் கொண்ட பெண்கள் விடுதி கோவை மற்றும் வைகை அணை பயிற்சி மையங்களில் கட்டுவதற்கும் வகுப்பறை, ஆய்வுக்கூடம், கணினி அறை, நூலகம், கலையரங்கம், அருங்காட்சியகம் அமைப்பதற்கும் புதிய குடியிருப்புகளைக் கட்டவும், ஏற்கனவே உள்ள குடியிருப்புகளை பராமரித்து புதுப்பிக்கவும் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கும் 15.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் 2019-20 ம் ஆண்டில் மேற்கொள்ளப்படும். வனத்துறை அலுவலகங்கள், அரசு சந்தன மரக்கிடங்கு, மரக்கிடங்கு மற்றும் சோதனைச்சாவடிகளில் 2019- 20ம் ஆண்டு 1.03 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

மருத்துவ குணமுள்ள தோட்டங்களை மேம்படுத்திட புல்லேரி மற்றும் தண்டரை மூலிகை பண்ணை தோட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 3.34 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2019-20ம் ஆண்டில் இத்திட்டம் 2.47 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

வளர்ந்த வரும் நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இழந்த பன்முகத்தன்மையை மீட்டெடுக்கும் விதமாக அரிதான மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள், தாவரங்களை பாதுகாக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் 5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மூன்றாண்டுகளில் பல்லுயிர்ப்பூங்கா அமைக்கப்படும், என அறிவித்துள்ளார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...