ஜி.எஸ்.டி. அமலுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைகின்றனர் : கோவையில் ஜி.எஸ்.டி. ஆணையர் பேட்டி

கோவை : ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்து வருவதாக கோவையில் ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

கோவை : ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்து வருவதாக கோவையில் ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நேற்று ஜி.எஸ்.டி. தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை ஜி.எஸ்.டி. பவனிலும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் பேசியதாவது :- நாட்டின் நிதித்துறையில் ஜி.எஸ்.டி. சிறப்பான சீர்திருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் நன்கு பயனடைந்துள்ளனர். கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களின் 2019 மார்ச் 31 வரையிலான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 4,610 கோடியாகும். இது கடந்த நிதியாண்டை விட பல மடங்கு கூடுதலானதாகும். கடந்த நிதியாண்டில் ரூ. 2.911 வருவாயாகும். 

அதேபோல, 2019-20 நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 26% ஜி.எஸ்.டி. வருவாய் பெறப்பட்டுள்ளது. இது கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இதே அளவு வருவாய் கிட்டியது. 

மேலும், 2017-18?ம் ஆண்டு நிதியாண்டில் ரூ. 478 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டில் ரூ. 529 கோடி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் 1.153 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும், ரூ. 152 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கோவையில் வரி ஏய்ப்பு செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரூ. 40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாத இறுதி வரை வரி ஏய்ப்பு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், எனக் கூறினார். 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...