திருப்பூர் : திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மண்டல அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 41-வது வார்டு, பி.ஏபி. நகர், செரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், இங்கு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாகப் பராமரிக்கவில்லை எனவும், குடிநீர் குழாய் பதிக்கத் தோண்டிய சாலைகளை மூடாததால் சாலைகள் குண்டும் குழியுமாய் போக்குவரத்துக்கு இடையூறாய் இருப்பதாகவும் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாநகராட்சியின் 3-வது மண்டல அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் விநியோகம் வாரம் இருமுறையாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினர்.