கோவை : புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்ததாகவும், தமிழகம் குறித்து கிரண்பேடி பேசி இருப்பதற்கு புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கோவை : புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னிடம் தெரிவித்ததாகவும், தமிழகம் குறித்து கிரண்பேடி பேசி இருப்பதற்கு புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழக தலைவர்கள், பொதுமக்களை பற்றி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், தமிழக தலைவர்கள் ஊழல் பேர்வழிகள் என்றும், ஊழலில் மக்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்றும், தண்ணீர் பிரச்சினை குறித்து சொல்லும் போது தெரிவித்துள்ளார். தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, உத்திரபிரதேம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்றது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஏரியை தூர்வார வந்த போது அனைவரும் உதவினோம்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட மழை பொய்த்து போனதும், கிருஷ்ணா நதிநீர் வராததும் காரணம். தமிழக அரசியல்வாதிகளை எந்தவித ஆதாரமில்லாமல் பேசுவதும், மக்களை தவறாக பேசுவதும் என துணைநிலை ஆளுநர் இறங்கி இருக்கின்றார். புதுச்சேரி ஆளுநருக்கு தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி பேச அருகதை கிடையாது. கிரண்பேடி தேவையில்லாமல் மற்ற மாநில விவகாரங்களில் தலையிட்டு கெட்ட பெயரை தானே சம்பாதித்துக் கொள்கிறார். இது கண்டனத்திற்குரியது.
தி.மு.க. தலைவர் இந்த பிரச்சினையை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பிய போது, சபாநாயகர் அதை துரதிஷ்டவசமாக அவை குறிப்பில் இருந்து நீக்கியிருக்கின்றார். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வியாதி ஒன்று உள்ளது. அது விளம்பரத்துக்காகப் பேசி வருவது. துணைநிலை ஆளுநருக்கு தகுதியில்லாதவர் கிரண்பேடி. மத்திய அரசு புதுவையில் காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று கிரண்பேடியை அனுப்பி வைத்துள்ளது. கிரண்பேடியின் செயல்கள் தரம் தாழ்ந்து போய்விட்டது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்ப இருக்கின்றன. தமிழகத்திற்கும், கிரண்பேடிக்கும் சம்பந்தம் இல்லை, என தெரிவித்தார்.