கோவை : பொள்ளாச்சி அருகே உணவு இடைவேளையில் புகை பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளர் மீது நிலத்தின் உரிமையாளர் சாதி ரீதியாக தாக்கியதை தடுக்கச் சென்ற மக்கள் விடுதலை முன்னணி நிர்வாகியின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம் பாளையத்தில் இருக்கும் முத்துசாமி தோட்டத்தில் நேற்று மதியம் தென்னை மட்டை உரிக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பணி முடிந்து உணவு வேளையில், தொழிலாளர் ஒருவர் தோட்டத்தின் ஒரு பகுதியில் பீடி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர் பர்வத கண்ணன், 'தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நீ, என் முன்னாடியே பீடி குடிக்கிறாயா..!' என சாதி பெயரை சொல்லி கெட்ட வார்த்தையில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தகவலறிந்து சென்ற மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் செல்வம், ஏன்..இப்படி சாதி ரீதியாக நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவரையும் சாதி சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர், கையில் கிடைத்த தென்னை மட்டையை எடுத்து செல்வத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அருகிலிருந்த நாச்சிமுத்து என்பவரும் இரும்பு கம்பிகளை எடுத்து தாக்கக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய பர்வத கண்ணன், செல்வத்தை இரும்பு கம்பியால் தாக்கியதில் இடது கையில் எலும்பு முறிவும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

பின்னர், பலத்த காயம் அடைந்த செல்வத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர், அருகே உள்ள எலும்பு முறிவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தொழிலாளர்கள், பர்வத கண்ணன், அவரது மனைவி மற்றும் உறவினர் நாச்சிமுத்து மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.