கோவை : சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து வடவள்ளியில் நேற்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இரவு விடுவிக்கப்பட்டனர்.

சீரான குடிநீர் விநியோகம் செய்யாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து தடையை மீறி வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவரும், பி.என்.புதூர் தி.மு.க. பகுதி கழக பொறுப்பாளருமான வ.ம. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம். உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, சீரான குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியைக் கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாகக் கூறிய அவர்கள், வடவள்ளியில் போதிய அளவிலான தண்ணீர் இருந்தும், அதனை குடியிருப்புகளுக்கு விநியோகிக்காமல், தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர். இதனால், வடவள்ளி பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் குற்றம்சாட்டினர். மேலும், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் காலிக்குடங்களுடன் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார், மருதமலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இரவு வரை சிறைப்படுத்தப்பட்டிருந்த பெண்கள் உள்பட 200 பேரும் நேற்றிரவு விடுவிக்கப்பட்டனர்.