கோவை : செட்டிபாளையம் அருகே மின் இணைப்பிற்கு போலியான ஆவணங்கள் கொடுத்த விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் மீது 4 பிரிவுகளின் கீழ் செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை : செட்டிபாளையம் அருகே மின் இணைப்பிற்கு போலியான ஆவணங்கள் கொடுத்த விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் மீது 4 பிரிவுகளின் கீழ் செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
செட்டிபாளையம் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் கிரசர் யூனிட் அமைப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற கடந்த ஆண்டு ஜனவரியில் விண்ணப்பித்திருந்தார். இதில், பெறப்பட்ட மாசு கட்டுப்பாட்டு தரச்சான்றிதழை மாற்றி போலியான ஆவணங்களை தயார் செய்து மின் வாரியத்தில் கொடுத்து மின் இணைப்பை பெற்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவரின் முயற்சியால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், ஜெயக்குமார் போலியான ஆவணங்களை கொடுத்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமாறன் கொடுத்த புகார் அடிப்படையில், செட்டிபாளையம் போலீசார் போலியான ஆவணங்களை தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.