சிலிண்டருக்கான மானியத் தொகையை எண்ணை நிறுவனங்களே வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக செலுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கோவை : சிலிண்டருக்கான மானிய தொகையை சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சிட்டிசன் வாய்ஸ் கோவை வலியுறுத்தியுள்ளது.

கோவை : சிலிண்டருக்கான மானிய தொகையை சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சிட்டிசன் வாய்ஸ் கோவை வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு சிட்டிசன் வாய்ஸ் கோவை கடிதம் எழுதியுள்ளது. 

அதில், தற்போது உள்ள நடைமுறைப்படி உபயோகிப்பாளர் மானியத்துடன் கூடிய சிலிண்டர் பெறும் போது முழுத் தொகையையும் (மானியத்துடன்) செலுத்திப் பெற்றுக் கொள்கிறார்கள். அவருக்கு குறித்த தானமானியம் 15 - 20 நாட்களுக்குப் பிறகு அவருடைய வங்கி கணக்கில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களால் செலுத்தப்படுகிறது. அது பற்றிய செய்தி அந்த வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறைப்படி ஒரு வாடிக்கையாளர் தனக்குரிய மானியத்தை பெற 15 முதல் 20 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. மேலும், அவர்கள் ஒவ்வொரு முறையும் வங்கிக் கணக்குகளை சரிபார்த்து மானிய தொகை வரபானையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. 

வங்கிகள் குறுஞ்செய்தி அனுப்ப கட்டணம் வசூலிப்பதால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தி வசதியை பெற்றிருப்பதில்லை. அதனால், அவர்களுக்கு மானியம் வரவு வைத்ததற்கான செய்தி சென்றடைவதில்லை மேலும், கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ரூ. 73 கோடி மானிய தொகை வாடிக்கையாளர்கள் கணக்கிற்கு செலுத்தாமல் மேற்படி மானிய தொகையை மேலாண்மை செலுத்துவதும் ஏர்டெல் நிறுவனம் வசம் இருந்ததாக ஊடக செய்திகள் வாயிலாக அறிகிறோம். இது கால் இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

ஆகவே, வரும் காலங்களில் சிலிண்டருக்கான மானிய தொகையை சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனங்களே நேரடியாக இடையில் மேலாண்மை நிறுவனங்கள் ஏதுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பயன்பெற ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ரயில்வே டிக்கெட் கட்டண சலுகை தொடர்பாக தற்போதுள்ள நடைமுறைகளின்படி பயணிகள் தங்களுக்கான ரயில் டிக்கெட்டை பெரும் பொழுது, அவர்களுக்கு உண்டான கட்டணத்தை சலுகை தவிர்த்து செலுத்தி வருகின்றனர். ரயில்வேதுறை இது சம்பந்தமாக சில மாற்றங்களை செய்ய உள்ளதாக அறிகிறோம் அதாவது, அனைத்து பயணிகளும் மூத்த குடிமக்கள் உட்பட தங்களுக்கு உரிய டிக்கெட் வாங்கும் பொழுது பயணத்திற்கு உண்டான முழு கட்டணத் தொகையை டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள சலுகை உட்பட செலுத்தி விட்டு, நுகர்வோருக்கு உண்டான சலுகை தொகையை பின்னாளில் அவர்கள் கணக்கின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமாறு திட்டமிடுவதாக அறிகிறோம். இம்முறை அமல்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த பயணிகளும் மிகவும் அவதிக்குள்ளாவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம் 

மேலும், டிக்கெட் பெறும் போது முழுத்தொகையையும் செலுத்துவதால் அவர்களுக்கு கூடுதல் பணச்சுமை ஏற்படுகிறது. அத்துடன் அவர்களுக்குரிய சலுகைத் தொகை பெற வங்கிகளுக்கு செல்வதும், சில நாட்கள் காத்திருப்பதும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை உண்டாக்கும். பெரும்பாலான பயணிகள் நகரம் சாராமல் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஆதலால் சம்பந்தப்பட்ட சலுகைகளைப் பெறுவது வங்கிகள் மூலம்தான் எனும் போது, அவர்களுக்கு அரசின் மீது பெரும் அதிருப்தியை உண்டாக்கும். ஆகவே, மேற்கண்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு பயணிகளுக்கு டிக்கெட் வினியோகம் சம்பந்தமாக தற்போதுள்ள நடைமுறையை தொடர கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...