கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு பொள்ளாச்சியில் வரும் 4-ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணிக்காலியிடத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இத்தேர்விற்கு கடந்த மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும் குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கிறது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு வரும் 4-ம் தேதி முதல் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் குழு விவாதம், பாடவாரியாக வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வில் தேர்ச்சிபெற அனைத்து வழிவகைகளும் செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே போட்டித்தேர்வு எழுதி அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இத்தேர்விற்கு விண்ணப்பித்து பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ள இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள், விண்ணப்பித்தற்கான ஆதாரம் மற்றும் புகைப்படத்துடன் விவரங்களை பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 3-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.