குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகள் தரமானதாக இல்லை : கோவை மாவட்ட ஆட்சியரிடம் பயனாளிகள் மனு

கோவை : குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகள் தரமானதாக இல்லை எனவும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி உக்கடம் கழிவுநீர் பண்னை அருகே வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகள் தரமானதாக இல்லை எனவும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி உக்கடம் கழிவுநீர் பண்னை அருகே வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிக்கு வழங்கப்பட்டது. ஆறு மாடிகளாக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மாடி சரிந்து விழுந்தது. மேலும், இங்கு சுகாதாரமற்ற சூழல் உள்ளதால், மாற்று இடம் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இது குறித்து பயனாளிகள் கூறுகையில், "உக்கடம் கழிவுநீர் பண்ணையில் தினமும் 100 லாரிகளில் கழிவுநீர் கொட்டப்படுவதோடு, குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரமற்ற நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அலட்சியம் காட்டுகின்றனர். மேலும், இங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களை விட வாடகைக்கும், போகியத்திற்கும் அதிகளவில் வெளி ஆட்கள் உள்ளனர். கழிவுநீர் பண்ணை அருகே ஒதுக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தரமாக இல்லாமலும், சுகாதார சீர்கேடுகள் நிறைந்த இடமாக இருப்பதால், தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...