கோவை : சரவணம்பட்டி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பதிற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவையை அடுத்துள்ள கோவில்பாளையம் கோவில்மேடு பகுதியில் பன்றி கடை நடத்தி வரும் நாகராஜ் அழைத்ததின் பேரில், அவரது தந்தை சுப்ரமணிக்கு சொந்தமான பன்றி பண்ணையை சுத்தம் செய்வதற்காக தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த ராஜப்பன், வேடியப்பன் மற்றும் மற்றொருவரான வேடியப்பன் ஆகியோர் கடந்த 26-ம் தேதி சென்றனர். பாதுகாப்பு உபகரணங்கள் இன்று பணியில் ஈடுபட்ட இவர்கள், செப்டிக் டேங்கில் இருந்த விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக, கையால் மலம் அள்ளும் தடை சட்டம் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் மற்றும் அரசு பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆறுச்சாமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து யு.கே. சிவஞானம் கூறுகையில், "விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பம், இவர்களது வருமானத்தை நம்பியே இருந்தது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு கையால் மலம் அள்ளும் தடை சட்டம் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் படியும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும் இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.