கோவை விமான நிலையம் குறித்து மக்களவையில் குரல் எழுப்பிய எம்.பி. ஆ. ராசாவுக்கு கொங்கு குளோபல் ஃபார்ம் நன்றி

கோவை : கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச வான்வழி போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நீலகிரி எம்.பி. ஆ. ராசாவுக்கு கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.


கோவை : கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச வான்வழி போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மக்களவையில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நீலகிரி எம்.பி. ஆ. ராசாவுக்கு கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர். 

கோவை விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவைகள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதாகவும், விமான சேவை கோரி அளிக்கப்பட்ட அறிக்கைகள் நிலுவையில் போடப்பட்டுள்ளதாகவும் அண்மையில் மக்களவையில் நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசினார். மேலும், டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரியை எம்.பி. ஆ. ராசா நேரில் சந்தித்து கோவை விமான போக்குவரத்து விரிவாக்கம் குறித்து மனு ஒன்றையும் கடந்த வாரம் அளித்தார். 

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து துபாய், கோலாலம்பூர் மற்றும் பேங்காக் ஆகிய நகரங்களுடனான சர்வதேச சேவைக்காக மக்களவையில் குரல் கொடுத்த நீலகிரி எம்.பி. ஆ. ராசாவை நேரில் சந்தித்து கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல எம்.பி.க்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறும் அவர்கள் அப்போது ஆ. ராசாவிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...