நீலகிரி காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் பொறுப்பேற்பு : மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என உறுதி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்ற கலைச்செல்வன் தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்படும் என இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்ற கலைச்செல்வன் தெரிவித்தார்.

தமிழகமெங்கும் கடந்த வாரம் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், ஒரு சிலர் பதவி உயர்வு பெற்றனர். இதில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சண்முகப் பிரியா சென்னை குற்றப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் கூடுதல் ஆணையராக இருந்த கலைச்செல்வன், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். இந்த மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு அதிகப்படுத்தப்படும்," என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...