கோவை : கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னையைத் தவிர பெரும்பாலான நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் அந்தந்த மாநகராட்சி ஆணையரின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளைக் கையாளுவதில் மாநகராட்சி ஆணையர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு தலைமை நிர்வாக அலுவலரை நகரம் வாரியம் நியமிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி கோவை ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அலுவலராக முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் ஆர். சுகன்யா நியமிக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டு பணி அனுபவத்துடன், ஆளுமையில் எந்தவித முன்அனுபவமும் இல்லாதவரை நியமனம் செய்ததாகக் கூறி எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதே மாதத்தில் 28-ம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த சூழலில், கோவை உள்பட பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கான சி.இ.ஓ.க்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் நலன் சார்ந்த திட்டம் என்பதால், அரசுக்கு ஆதரவான நபர்களை நியமிக்காமல், அந்தந்தப் பகுதி மக்களிடம் ஆலோசனை செய்து தகுதியானவரை நியமிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டி நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் ஸ்பெஷல் பர்ப்போஸ் வைக்கிள்ஸ்க்கென ஒரு சி.இ.ஓ.வை வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தின் ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் சி.இ.ஓ.வின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.