நீலகிரி : உதகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பாட்டு போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி. சுசிலா கேடயங்களை வழங்கி கெளரவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோவையைச் சேர்ந்த தனியார் இசை கல்லூரி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே பாட்டு போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி. சுசிலா கலந்து கொண்டு, மேடை பாடல் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்த அவர், பாடகர்களையும், இசை கலைஞர்களையும் வெகுவாக பாராட்டியதுடன் அவர்களுடன் இணைந்து தான் பாடிய பாடல்களை பாடி மகிழ்ந்தார். பின் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்குவதாக பாராட்டினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.