நீலகிரி : கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிலர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நீலகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் 20-க்கும் மேற்பட்ட மக்கள் கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தற்போது வயநாடு மாவட்டத்தில் சிலர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிபா வைரஸ் மற்றும் பன்றி காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ள வயநாடு பகுதி, நீலகிரி மாவட்டத்தின் அருகில் உள்ள பகுதியாக உள்ளதாலும், இங்கிருந்து கீழ்நாடுகாணி, தாளூர், சேரம்பாடி போன்ற சோதனை சாவடிகள் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு அதிகம் மக்கள் வந்து செல்கின்றனர். இந்த சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த காய்ச்சல்களுக்கான அறிகுறிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.