கருப்பு தாள்களை நீரில் நனைத்தால் ரூ. 2,000 ஆக மாறும் : திருப்பூரில் சதுரங்க வேட்டை பட பாணியில் நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர் : தினுசு தினுசாக திருடும் சதுரங்க வேட்டை பட பாணியில், கருப்பு தாள்களை தண்ணீரில் நனைத்தால் 2,000 ரூபாய் நோட்டாக மாறும் என நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : தினுசு தினுசாக திருடும் சதுரங்க வேட்டை பட பாணியில், கருப்பு தாள்களை தண்ணீரில் நனைத்தால் 2,000 ரூபாய் நோட்டாக மாறும் என நூதன மோசடியில் ஈடுபட்ட மூவரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

‘ஒருத்தர் கிட்ட பரிதாபத்தை எதிர்பார்த்தா நம்மளால ஜெயிக்க முடியாது, அவங்க ஆசையை தூண்டி விட்டா எவ்வளவு பணம் வேணும்னாலும் சம்பாதிக்கலாம்’ என புது பாணிகளில் திருடும் முறைகளை வெளிச்சம் போட்டு காட்டிய படம் சதுரங்க வேட்டை. அந்த பட பாணியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கருப்பு தாள்களை தண்ணீரில் வைத்தால் 2,000 ரூபாயாக மாறும், ஆயிரம் ரூபாய்க்கு 3,000 ரூபாய் என ஒரு நூதன மோசடி நடைபெற்றுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பல மாதங்களாக பணத்தை மும்மடங்காக மாற்றி தருவதாகவும், கருப்பு தாளை 2,000 ரூபாய் நோட்டாக மாற்றி தருவதாகவும் பண மோசடி நடை பெற்று வந்துள்ளது. அசல் 2,000 ரூபாய் நோட்டில் கருப்பு கெமிக்கல் பவுடர் தடவி அதனை கருப்பு பேப்பர் என காண்பித்து, பின்னர் அதில் ரசாயனம் தடவுவதை போல ஏமாற்றி, அதை தண்ணீரில் கழுவிய உடன் பணமாக மாற்றிக் காட்டியுள்ளனர். இதுப்போல, பல பேரிடம் ஒரு லட்சம் ரூபாய்க்கு முன்று லட்சம் தருவதாகக் கூறி பணமோசடி செய்து வந்துள்ளனர். பணம் பெற்ற பிறகு இந்த மோசடி கும்பல் பணத்தை தராமல் இழுத்தடித்ததால், இவர்கள் மீது சந்தேகமடைந்த நபர்கள் தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். 

கருப்புத்தாள்களை ரசாயனம் தடவி பணமாக மாற்றுவது ஏமாற்று வேலை என்பதால், இந்த கும்பலை பிடிப்பதற்கு திட்டமிட்ட தி.மு.க.வினர் பணம் மாற்ற வேண்டும் என நடித்து அவர்களை வரவழைத்து தொடர் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களை விசாரித்ததில் தர்மபுரி மாவட்டம் கொங்கரைப் பட்டியைச் சேர்ந்த கோபி, வாணியம்பாடி சேனப்பட் என்ற பகுதியைச் சேர்ந்த ஷாஜகான், வேலூர் மாவட்டம் முல்லை நகரைச் சேர்ந்த தசையன் என்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் மூவரும் தொடர்ந்து தாராபுரம் பகுதிகளில் பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதனையடுத்து, தாராபுரம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில், மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கருப்பு தாள்கள், ரசாயனம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பறித்தனர் என்பது குறித்தும், தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...