கோவை : மேட்டுப்பாளையத்தில் ஆணவப் படுகொலை செய்த வர்ஷினி பிரியாவின் உடல் ஊர்வலமாகஎடுத்து செல்லப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஜோடி கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்யக் கூடாது என நினைத்து கடந்த 25-ம் தேதி கனகராஜை சொந்த சகோதரரே ஆணவப் படுகொலை செய்தார். இதனை தடுக்க வந்த காதலி வர்ஷினி பிரியாவையும் கனகராஜின் சகோதாரர் வினோத் சராமரியாக வெட்டினார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்த வினோத் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இன்று வர்ஷினி பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மேட்டுப்பாளையம் கொண்டுவரப்பட்டு காந்திநகரில் உள்ள அவரது பாட்டில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் முக்கிய சாலை வழியே ஊர்வலமாக அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம், ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட 13 அமைப்புகள் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அப்போது, ஊர்வலம் சிறுமுகை சாலையில் கொலை நடந்த இடம் அருகே சென்ற போது திடீரென சாலையில் அமர்ந்து அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். இந்த காதல் ஜோடியை ஆணவப் படுகொலையில் வினோத் மட்டுமின்றி மேலும் மூவர் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்து முன்னணியினை தொடர்புபடுத்தி கோசங்களை எழுப்பினர். பின்னர், அவர்களை அப்புறப்படுத்த முயன்ற காவல்துறைக்கும் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் சமாதானத்தை ஏற்று 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஊர்வலம் புறப்பட்டு சென்ற நிலையில், சாதிகளை ஊக்குவிப்பதாக இந்து முன்னணிக்கு எதிராக கோசங்களை எழுப்பிய நிலையில், அந்த அமைப்பினை தடை செய்யக் கோரியும் கோசங்களை எழுப்பினர். அப்போது, சாலை ஓரத்தில் இருந்த இந்து முண்ணனி கொடி கம்பத்தினை சேதப்படுத்தி கொடிகளை கிழித்து சாலையில் வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், சிறுமுகை சாலையில் உள்ள மொக்கை மயானத்தில் வர்ஷினி பிரியாவின் உடல் இறுதி சடங்குகள் மற்றும் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. இதில், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுசெயலாளர் வன்னியரசு, உடுமலை கெளசல்யா உட்பட முக்கிய முற்போக்கு சமூக கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு திருமுருகன் காந்தி பேட்டியளித்ததாவது :- தமிழகத்தில் சாதிய ஆணவப் படுகொலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆதிக்க சாதிகளினால் இளம் உயிர்கள் பரிபோகிறது. இதனை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்க சக்திகளுக்கு துணை போகின்றன. குறிப்பாக, மேட்டுப்பாளையத்தில் நடந்த இந்த கொலையில் இந்து முண்ணனிக்கு தொடர்பு இருக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எடப்பாடி அரசு இந்து இயக்கங்களை வளர்த்து வருகிறது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த எந்த ஆணவப் படுகொலையும் தடுக்கப்படவில்லை. மேலும், தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறாமல் தடுக்க உரிய சட்டங்களை கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன் அரசுப் பணியினை விரைந்து வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.