வாளையார் அருகே வாகன விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பலி : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

கோவை : கோவையிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான நிலையில், மேலும் ஒரு சிறுவன் இன்று உயிரிழந்தான்.

கோவை : கோவையிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான நிலையில், மேலும் ஒரு சிறுவன் இன்று உயிரிழந்தான்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர், உறவினர் ஒருவரின் குழந்தையை பார்க்க இன்று ஆம்னி வேன் மூலம் பாலக்காடு சந்திரா நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இந்த ஆம்னி வேனை கரும்புகடையைச் சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர் ஓட்டிச் சென்றார். வாளையாரைத் தாண்டி செல்லும்பொழுது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஷாஜஹான் மற்றும் வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம், குழந்தைகளான ஆலுவா ஷூஃபியா, ஷெரின், ரியான் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 



இதையடுத்து, மேலும் வாகனத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், தகவலறிந்து சென்ற வாளையாறு போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் 5 உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை கரும்புக்கடை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் சிரமமின்றி அஞ்சலி செலுத்த அங்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. 



இதனிடையே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 8 வயது சிறுவன் நிஸார் என்பவரின் மகன் ரிலுவான் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...