கோவை : கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி வியாபாரம் செய்து கொண்டிருந்த 2 நபர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்று வந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக ஆங்காங்கே லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகிறது. இதை ஒழிக்க காவல்துறையினரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இந்த லாட்டரி சீட்டு விற்பனை பல வடிவங்களில் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, 1-ம் நம்பர் லாட்டரி, 3-ம் நம்பர் லாட்டரி என்று தொழில்நுட்பரீதியாக லாட்டரி வியாபாரங்கள் நடைபெற்று வருகிறது. இப்படி நடைபெறும் சட்டவிரோத வியாபாரங்களால் சாதாரண தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கி தத்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாநகரில் நடைபெற்று வரும் சட்டவிரோத லாட்டரி வியாபாரங்களை தடுக்க வேண்டும் என மாநகர காவல் துறையினர் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், அண்டை மாநிலங்களிலுள்ள லாட்டரிகள்,1- ம் நம்பர், 3- ம் நம்பர் போன்ற சட்டவிரோத லாட்டரி வியாபாரங்களை தடுக்க தனிப்படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தனிப்படை போலீசார் மாநகரம் முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி நடைபெற்ற கண்காணிப்பில் செல்வபுரம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி வியாபாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செல்வபுரம் சாஸ்தா நகருக்கு விரைந்த தனிப்படை போலீசார், செல்வபுரம் காவல்நிலைய போலீசார் உதவியுடன் குற்றவாளிகளை மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், லாட்டரி வியாபார கும்பலை சேர்ந்த இரண்டு பேர் தப்பிக்க முயன்றனர். ஆனால், தப்ப முயன்ற இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் பேரூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜின் மகன் ஜெயகுமார் (30) மற்றும் பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்த மாசான துரையின் மகன் சஞ்சய் பாபு (35) என தெரியவந்தது. இவர்கள் செல்வபுரம், பேரூர், பனைமரத்தூர், ஆர்.எஸ். புரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் மூலம் தங்களது சட்டவிரோத செயல்களை செய்து வந்ததுள்ளனர். அதே போல, இவர்கள் தினமும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாட்டரி வியாபாரத்தில் சம்பாதித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 73 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், செல்போன் மற்றும் லாட்டரி சீட்டுகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பின்னணி என்ன..?, இவர்களுடன் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள்..? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் ஏழை, எளிய மக்களை வஞ்சித்து கூலித் தொழிலாளர்களின் பணத்தை லாபகரமாக பிடுங்கி செல்லும் சமூக விரோத கும்பல்களை மாநகர போலீசார் இன்னும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்கள் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.