கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உயர்கல்வி நிறுவனங்களில் ரேக்கிங் தடுப்புச் சட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், துணை இயக்குநர் (கல்லூரி கல்வி) பொன்முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கோவை மாவட்டத்தில், ரேக்கிங் தடுப்புச் சட்டம் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள விதிகளின்படி பின்பற்றப்பட்டு இன்றளவும், ரேக்கிங் நிகழா மாவட்டமாக செயல்பட்டு வருகின்றது. கல்லூரிகளில் புதிதாக சேரும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களை முதுநிலை மாணவ, மாணவியர்கள் ரேக்கிங் நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அதனை அறவே தடுத்திடவுமான நடவடிக்கைகாகவுமே இவ்வாலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது.

மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு மாநில ஆளுநர் தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் தலைவராகவும் உள்ளார். நமது மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், தங்கள் கல்லூரிகளில் பயிலும், மாணவ மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இவ்வினத்தில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும். கல்லூரிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும்போது அதன் பின் பகுதியில் மாணவர்கள் ரேக்கிங் தொடர்பான புகார்களை பதிவு செய்ய ஏதுவாக இந்திய அரசின் புகார் எண்கள் மற்றும் முகவரிகள் பதிவிட வேண்டும். கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் மற்றும் இடையூறுகளை நேரடியாக தெரிவிப்பதில் பிரச்சனைகள் இருக்கும் என்பதால், கல்வி நிறுவனங்கள் அவர்களது வளாகத்தினுள் ஒரு புகார் பெட்டி வைத்து அதில் வரும் புகார் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வினத்தில் மனுக்களின் உண்மைத்தன்மை குறித்து இரகசிய விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.
ரேக்கிங் தடுப்பு குழுவினர் கல்லூரிகளில் புதிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கையின் போது தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ரேக்கிங் அச்சுறுத்தல்களை தடுக்க ரேக்கிங் தடுப்புக் குழுக்களுடன் பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து செயல்படவும், ரேக்கிங்களுக்கு எதிரான உறுதிமொழியினை மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் பெறுதல் வேண்டும். ரேக்கிங் நடைபெறும் கல்வி நிறுவனங்களில் அவற்றின் பல்கலைக்கழக மானியம் பெறும் தகுதியை திரும்பப் பெறவும் மற்றும் அதனை நிறுத்தி வைக்கவும், அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விபரத்தினையும் கல்லூரிகள் அறியும் வண்ணம் உரிய விழிப்புணர்வினை கல்லூரிகளிடையே ஏற்படுத்த வேண்டும். தவறுகள் நடக்கும் பட்சத்தில் கல்லூரி நிர்வாகம் மூலமாகவும் மற்றும் காவல்துறைக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும், மாணவர்கள் இடையூறு இன்றி கல்வி பயில உரிய சூழலை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பாதுகாப்பான சூழலில் தான் அவர்கள் கல்வி பயில்கின்றனர் என்பதனை உறுதி செய்ய வேண்டுமென, அவர் கூறினார்.