சாதிய கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரி மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், சாதிய கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், சாதிய கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக்கோரியும் மேட்டுப்பாளையத்தில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தனது சொந்த சகோதரனையே வெட்டி ஆணவ படுகொலை செய்த நிகழ்வு அரங்கேறியது. மேலும், காதலித்த பெண்ணையும் அரிவாளால் வெட்டிய நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாதிய ஆணவ படுகொலையை கண்டித்தும், தடுக்க தவறிய மத்திய, மாநில அரசைக் கண்டித்தும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட 13 அமைப்புகள் இணைந்து கூட்டமைப்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, சாதி மறுப்பு திருமணத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கோரியும், ஆணவ கொலையினை தடுக்க தனிச்சட்டம் இயற்றவேண்டும் என கண்டன கோசங்கள் எழுப்பினர். மேலும், ஆணவ கொலைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டங்களை பயன்படுத்தி பிணையில் வெளியே வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மேட்டுப்பாளையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...