கோவை : வால்பாறை டாப்சிலிப் முகாமில் பயிற்சி பெற்று வந்த காட்டு யானை சின்னத்தம்பி, பயிற்சி முடிந்து வெளியே விடப்பட்டுள்ளான்.

கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் அட்டகாசம் செய்து வந்த சின்னத்தம்பி, கடந்த ஜனவரி 25-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு, ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வரகலியாறு வனப் பகுதியில் விடப்பட்டது. ஆனால், அங்கிருந்து இடம்பெயர்ந்த யானை மீண்டும் கிராமங்களுக்குள் புகுந்தது. இதனை கண்காணித்து வந்த வனத்துறையினர், மீண்டும் மயக்க ஊசி செலுத்தி சின்னத்தம்பி யானையை பிடித்தனர். தொடர்ந்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கடந்து பிப்ரவரி 16-ம் தேதி டாப்சிலிப் முகாமில் உள்ள மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. தொடர்ந்து, 132 நாட்கள் பயிற்சி முடிந்த நிலையில், முகாம் யானைகளுடன் சேர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மரக் கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள சின்னத்தம்பி, கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு நிற்க வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் வன அதிகாரி நவீன் குமார் கூறுகையில், “அனுவமிக்க பாகன்களால் பயிற்சியளிக்கப்பட்டதால், சின்னத்தம்பியின் செயல்களை பொறுத்து வெளிவிடப்பட்டுள்ளது. சின்னத்தம்பிக்கு இன்னும் பயிற்சி முடியவில்லை. தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி தங்களது கட்டளைகளை ஏற்று நடக்கும் என பாகன்கள் நம்புகின்றனர்,” எனக் கூறினார்.