உதகை - கேத்தி இடையே இன்று முதல் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்

நீலகிரி : உதகை - கேத்தி இடையே இன்று முதல் மீண்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி : உதகை - கேத்தி இடையே இன்று முதல் மீண்டும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உள்நாடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் மலை ரயில் அதிகம் கவர்ந்ததுள்ளது. 



கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகை - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. வார இறுதி நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில், பின்னர் உதகை - கேத்தி இடையே தினமும் 3 முறை என விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவால் கடந்த 24-ம் தேதி இந்த சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் உதகை கேத்தி இடையே வார இறுதி நாட்களில் மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, “சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் உதகை கேத்தி இடையே குறுகிய தூர சிறப்பு ரயில் இன்று காலை துவங்கியது. உதகையிலிருந்து காலை 9.40, 11.30 மற்றும் மாலை 3 மணிக்கு என மூன்று முறை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். 146 இருக்கைகள் கொண்ட நான்கு பெட்டிகளில் முதல் வகுப்புக்கு 32 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வகுப்பில் 114 இருக்கைகள் உள்ளன. முதல் வகுப்புக்கு ரூ. 400, இரண்டாம் வகுப்புக்கு ரூ. 300 பயணக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 100 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்,“ என்றனர். சுற்றுலாப் பயணிகள் உதகை ரயில் நிலையத்தில், பயணம் செய்யும் நாளன்று பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம், இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...