கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25-ம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் காதல் ஜோடிகள் மீது நடந்த கொலை வெறி தாக்குதலில் காதலன் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆபத்தான சூழ்நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்ஷினி ப்ரியாவை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், கனகராஜ் அண்ணன் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் கொலைக்கு உடந்தையாக இருந்த ஐயப்பன், கந்தவேலு, சின்ராஜ் ஆகியோர் கைது செய்யப்படவில்லை என புகார் தெரிவித்த பெற்றோர்கள், அவர்கள் 3 பேரையும் கைது செய்யும் வரை வர்ஷினி பிரியாவின் உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வினோத்திற்கு தூக்கு தண்டனையும் உடனிருந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.