மேட்டுப்பாளையத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரரால் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த சிறுமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரரால் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் வாலிபர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த சிறுமி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகன் கனகராஜ், உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த 25-ம் தேதி மாலை கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத், பட்டியலின பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என தம்பி கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கனகராஜை சராமாரியாக வெட்டியுள்ளார். இதில், கழுத்து, கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பலத்த வெட்டுபட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வர்ஷினி பிரியாவும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார். இதில், காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...