சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட வலியுறுத்தி கோவையில் சி.பி.ஐ.(எம்) கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோவையில் சி.பி.ஐ.(எம்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி கோவையில் சி.பி.ஐ.(எம்) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



போதிய மழை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.ஐ.(எம்) சார்பில் சிவானந்தா காலனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...