கோவையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிக்க டிஜிட்டல் இயந்திரம் அறிமுகம்

கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் சம்பவ இடத்திலேயே அபராதத் தொகையை வசூலிக்க ஏதுவாக, காவலர்களுக்கு டிஜிட்டல் இயந்திரங்கள் இன்று வழங்கப்பட்டது.

கோவை : கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் சம்பவ இடத்திலேயே அபராதத் தொகையை வசூலிக்க ஏதுவாக, காவலர்களுக்கு டிஜிட்டல் இயந்திரங்கள் இன்று வழங்கப்பட்டது.

தமிழக காவல்துறையில்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு, குற்றம்‌ மற்றும்‌ போக்குவரத்து என மூன்று முக்கிய பிரிவுகள்‌ இயங்கி வருகிறது. இதில்,‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு மற்றும்‌ போக்குவரத்து பிரிவு காவல்‌ அலுவலர்கள்‌ சாலைப்‌ போக்குவரத்தை சீர்செய்வதுடன்‌ போக்குவரத்து விதிமீறல்களில்‌ ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம்‌ விதித்து, அதனை மாவட்ட காவல்‌ அலுவலகங்களில்‌ கட்டி வந்தனர்‌. இதனை எளிமையாக்கும்‌ விதமாக சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு காவல்‌ ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ போக்குவரத்து காவல்‌ ஆய்வாளர்கள்‌ ஆகியோர்கள்‌ அபராதத்தை சம்பவ இடத்திலேயே விதிக்கும்‌ வகையில்‌ தமிழக அரசு ஆணையின்‌ பேரில்‌, தற்போது சம்பவஇட தண்டம்‌ விதித்து இரசீது வழங்கும்‌ நடைமுறையில்‌ இருந்து வருகிறது.

இதனை மேலும்‌ எளிமைப்படுத்தும்‌ விதத்தில்‌ சம்பவ இட தண்டம்‌ விதித்து இரசீது வழங்கும்‌ நடைமுறையை கணிணிமயப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக காவல்‌ துறை, பாரத ஸ்டேட்‌ வங்கியுடன்‌ இணைந்து தற்போது தமிழகம்‌ முழுவதும்‌ 750 சம்பவஇட தண்டம்‌ விதிக்கும்‌ மின்னனு இயந்திரம்‌ காவல்துறை தலைமை அலுவலகம்‌ மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்‌மூலம்,‌ இனி சம்பவஇட தண்டம்‌ விதித்து பணம்‌ செலுத்தும்‌ போது அதனை கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மூலமாக மின்னணு முறையில்‌ செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும்‌, அபராதத்தை https://echallan.parivahan.gov.in என்ற இணையம்‌ வழியாகவும்‌ செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தொடர்‌ போக்குவரத்து விதிமீறல்களில்‌ ஈடுபடுபவர்களை எளிதாக கண்டறிய இயலும்‌. இதற்கான காவல்‌ துறை தலைமை அலுவலகத்தில்‌ போக்குவரத்து காவல்‌ ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ உதவி ஆய்வாளர்களுக்குக் கடந்த 24.06.2019 ஆம்‌ தேதி பிரத்யோகமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன்‌ தொடர்ச்சியாக இன்று கோவை சரகத்தில்‌ காவல்துறை துணைத்தலைவர்‌ ௧. கார்த்திகேயன்‌ மூலம்‌ தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவுப்படி கோவை சரகத்திற்கு வழங்கப்பட்ட 119 மின்னணு POS இயந்திரங்களில்‌ கோவை மாநகருக்கு 32, திருப்பூர்‌ மாநகருக்கு 04, கோவை மாவட்டத்திற்கு 14, ஈரோடு மாவட்டத்திற்கு 30, நீலகிரி மாவட்டத்திற்கு 12 மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டத்திற்கு 32 என பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இனிவரும்‌ காலங்களில்‌ போக்குவரத்து விதிமீறல்களில்‌ ஈடுபடுபவர்கள்‌ தங்களது அபராத தொகையை நேரடியாக பணமாக செலுத்தாமல்‌ மின்னணு (டிஜிட்டல்‌) முறையில்‌ செலுத்த தமிழக காவல்‌ துறையால்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...